உலகளாவிய ஓம் நமசிவாய பேரவை திருப்பூர் தமிழ்நாடு

வணக்கம்

தமிழ் மொழி சிவ பெருமான் அருளிய மொழி எனவே தமிழே சிவமாகும். இதனை நம் முன்னோர்கள் பெரிதும் உணர்ந்து சைவம் இறங்கு முகமாக இருந்து விடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

64 திருவிளையாடல்களை சிவன் புரிந்த மதுரையிலே சமணர்கள் நிலை கொள்ள முயற்சித்து தமிழையும் சைவத்தையும் புதைக்க முயற்சித்த போது பாலகனாய் இருந்த திருஞானசம்பந்தர் பெருமான் அனல் வாதம் புனல் வாதம் செய்து அவ்வுனர்களை வேரறுத்தார் சைவம் தழைத்தது. ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழகத்தின் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயருடன் போரிட்ட காலத்திலும் திருச்செந்தூர் கடற்கரையில் கிறிஸ்த்துவ தேவாலயம் கட்ட தடை விதித்து அக்கடற்கரையை திருச்செந்தூர் முருகனுக்ககவே காத்தார். வீரசைவர்களான மருது பாண்டியர்கள் காளையார் கோவிலை காக்க தமது தலையையும் கொடுத்தனர். வேலூர் கோட்டை சிவன் கோவிலை காக்க அருணாச்சலம் என்னும் சிவாச்சாரியார் கோபுரத்தில் ஏறி குதித்து நவாபுக்களை எதிர்த்து உயிரை விட்டார் இன்னும் எத்தனையோ தமிழர்கள் வீர சைவர்களாக விளங்கி சைவ சமயத்தை காத்தனர்.

தற்காலத்தில் நடப்பது என்ன? தமிழ் புறக்கணிக்கபடுகின்றது இதனால் தமிழாகவே இருக்கும் இறைவர் சிவா பெருமானின் வழிபாடு வழிதெரியாமல் இருக்கின்றது என்பது தான் உண்மை. கோவில்களில் கூட்டம் இருக்கின்றது நமது கோவில்களுக்கு நாம் நமது தெய்வத்தை தரிசிக்க கட்டணம் கட்டாயம் ஆகிவிட்டது. இந்த பணம் எங்கே செல்கிறது? சைவத்தை வளர்க்கவ? இல்லை தமிழை வளர்க்கவா? இல்லை சிவ தத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவா? இதில் ஏதும் இல்லையே தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக உபதேசங்கள் சைவத்தின் பெயரால் நடக்கின்றது. நடத்துபவர்களின் வருவாய்க்காகவே நடக்கின்றது என்பது தானே உண்மை. முழு அர்ப்பணிப்போடு சிவனையும் சிவ சொத்துகளையும் சிவனால் அருளப்பட்ட தமிழ் மொழியையும் காக்க நாம்

வீரசைவர்கள் ஆகவேண்டாமா இந்த நோக்கத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் தான் உலகளாவிய ஓம் நமசிவாயா பேரவை கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது 2007 ஆம் ஆண்டில் தனுஷ்கோடி கடற்கரையில் சிவபட்டினத்தில்

ஆத்மலிங்கம் பிரதிஷ்டை செய்தது. கடலூர் மாவட்டத்தில் அப்பர் சுவாமிகள் கடலில் இருந்து வெளியேறிய கரையேறிய குப்பம் தற்போது

வண்டிபாளையத்திலுள்ள அப்பர் சாமிகள் திருக்குளத்தை மீட்க நமது பேரவை மக்களை திரட்டி போராடியது. திட்டக்குடி வைத்தியநாதர் சுவாமிகள் திருக்குளத்தை ஆக்கிரமிப்புக்களை எதிர்த்து பேரவை இன்றும் போராட்டம் நடத்தி வருகிறது. இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை குறிப்பிடலாம் தொடர்ந்து இப்பணி ஆற்றிட இப்பேரவையின் முயற்சிகளையும் கூட்டும் முறையிலே நீங்கள் உங்களுடைய மேலான ஆதரவுகளை தரவேண்டுகின்றோம். நீங்கள் பேரவையின் உறுப்பினராகவேண்டும் இயன்றவர்கள் பொருளுதவிகளையும் இயலாதவர்கள் முயற்சிகளும் தர வேண்டுகின்றோம்.எனவே தமிழர்கள் பேசும் மொழியே சிவனாகிறது என்பதை உணர்ந்து சைவம் தழைக்க நமது பேரவையின் உறுப்பினர்கள் சைவத்தை காக்க கரம் கொடுத்து ஒருங்கிணைய வேண்டுகின்றோம். சைவமும் தமிழும் நமது ஆலயங்களும் நமது முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பெரும் சொத்து என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

நமசிவாய வாழ்க

திருச்சிற்றம்பலம்

CONTACT US
P.வெற்றிவேல்,
எண் 2/598,
புளியங்காடு மகாசக்தி நகர்,
வீரபாண்டி கிராமம்,
பல்லடம் வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.